04 November 2024

நன்றியோடு உம்மைப் பாடி

நன்றியோடு உம்மைப் பாடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நன்றியோடு உம்மைப் பாடி

                        நாள்தோறும் போற்றுவேன்

                        தாழ்வில் இருந்த என்னை

                        தூக்கி கரம் பிடித்து

                        வாழ வழி செய்தீரே

 

1.         பெயர் சொல்லி என்னை அழைத்தீர்

            பெரிய ஜாதியாக மாற்றினீர் - 2

            போதித்து வழி நடத்தி

            பிள்ளைகளைப் பெருகச் செய்தீர்

            உம் புகழ் சொல்லிடுவேன் - 2 - நன்றியோடு

 

2.         தாயைப் போல் என்னை காத்தீர்

            தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் - 2

            எத்தனை நாவுகளால்

            உம் புகழ் பாடினாலும்

            உம் கிருபைக் கீடாகுமா - 2 - நன்றியோடு

 

3.         பயத்தை என்னினின்று நீக்கி

            தைரிய சாலியாக மாற்றினீர் - 2

            பாதையை பாது காத்தீர்

            உம் புகழ் பாட செய்தீர்

            எப்படி நன்றி சொல்வேன் - 2 - நன்றியோடு

 

 

- Bishop Kingsly

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...