சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்
சேயாய் பிறந்தார்
அடிவேறாய் துளிர்த்தார்
கன்னி மரி மைந்தனாகவே
மேன்மை துறந்தார் மனுவேலாய்
உதித்தார்
மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே
தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலே
தூய்மையாக தாய் மடியில் முன்னணையிலே
- 2
1. விண்ணோர் வந்து பாடினார்
மண்ணோர் தந்து
வாழ்த்தினார்
எண்ணில்லாத விந்தை தூதர்
பண்ணிசைத்தாரே
- 2
சான்றோருடன்
கூடுவோம்
மாந்தர் யாரும் பாடுவோம்
ஆன்றோருடன்
நாடுவோம்
பாலன் பாதத்தை - சேயாய்
2. வானம் மீது மின்னும் வெள்ளி
பாதை காட்டி சென்றதே
வான சாஸ்திரி
பொன்னும் வெள்ளி
தானம் செய்தாரே - 2
நல்ல வழி காட்டுவோம்
உள்ளம் களித்து வாழ்த்துவோம்
இல்லாதோர்க்கு
சேவை செய்து
நன்மை செய்வோமே - சேயாய்
- M. Rajasingh
Comments
Post a Comment