ஒரு செய்தி உனக்குச் சொல்லுவேன்
ஒரு செய்தி உனக்குச் சொல்லுவேன்
அது நற்செய்தி என்று சொல்லுவேன்
நற்செய்தியை நீயும் கேட்டிடு
கேட்டு வியப்புடனே சொல்லி மகிழ்ந்திரு - ஒரு
1. பிறந்தார் ஓர் பாலகன்
அவர் படைப்பின் கர்த்தாவே
வந்தாரே வானம் விட்டு
தந்தாரே இரட்சிப்பினை
- ஒரு
2. கன்னியின் பாலா வாழ்க நீர்
என்றும் நன்னலமும்
பண்பும் நீர்
அன்புடன் தந்தருள்வீர்
என் வாழ்வில் நித்திய இன்பம் - ஒரு
3. ஆதியும் அந்தமும் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமுமே
நாக்கினிய பாடுவோம்
நல்வேந்தர்
பிறந்தார் இன்றே - ஒரு
Comments
Post a Comment