11 November 2024

நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்

நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்

                        நான் பயப்படேன் நீர் என் கோட்டை

                        நான் பயப்படேன் நீர் என் தேவன்

                        நான் உம்மை நம்பி இருக்கிறேன்

 

1.         தேவனே நான் உமது மணவாட்டி

            எனக்குச் சத்துரு உமக்கும் சத்துரு

            என் வலப்பக்க நிழல் நீரே

            எதுவும் என்னைச் சேதப்படுத்தாது

            என் வலப்பக்க நிழல் நீரே

            எதுவும் என்னைச் சேதப்படுத்தாது - நான் பயப்படேன்

 

2.         தேவனே நான் உமது ஊழியன்

            எனக்குச் சத்துரு உமக்கும் சத்துரு

            சத்துருவுக்கு நீர் எதிராய்

            எனக்குச் சகாயம் செய்திடுவீர்

            சத்துருவுக்கு நீர் எதிராய்

            எனக்குச் சகாயம் செய்திடுவீர் - நான் பயப்படேன்

 

3.         தேவனே நான் உமது கண்மணி

            எனக்குச் சத்துரு உமக்கும் சத்துரு

            என்னைத் தொடுகிறவன்

            உம்மையேத் தானே தொடுகிறான்

            என்னைத் தொடுகிறவன்

            உம்மையேத் தானே தொடுகிறான் - நான் பயப்படேன்

 

4.         தேவனே நான் உமது சீஷன்

            எனக்குச் சத்துரு உமக்கும் சத்துரு

            இந்த உலகம் முடியும்வரை  

            நீர் என்னோடு என்றும் இருக்கிறீர்

            இந்த உலகம் முடியும்வரை  

            நீர் என்னோடு என்றும் இருக்கிறீர் - நான் பயப்படேன்

 

5.         தேவனே நான் உமது பிள்ளை

            எனக்குச் சத்துரு உமக்கும் சத்துரு

            உலகத்தில் இருப்பவனில்

            என்னோடு இருப்பவர் பெரியவர்

            உலகத்தில் இருப்பவனில்

            என்னோடு இருப்பவர் பெரியவர் - நான் பயப்படேன்

 

 

- Arul Joslin

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...