முன்னோர்கள் சொன்னபடி நல்ல
(அடேய் ...
அடுத்த வீட்டு
அப்துல்லா
பக்கத்து வீட்டு
பால்ராஜி
எதுத்த விட்டு ஏகாம்பரம்
எல்லாரும் வாங்கடா
இயேசு சாமி பொறந்தாச்சு ...)
பல்லவி
முன்னோர்கள் சொன்னபடி நல்ல நேரம் வந்தாச்சு
எல்லாருக்கும்
என்ற நிலை ஆயாச்சு
வானவர்கள் செய்தி
கேட்டு இடையர்களும் வந்தாச்சு
பாலன் இயேசு முகத்த
பாத்து பாட்டு ஒன்னு தந்தாச்சு
கொட்டுவோம் தட்டுவோம் கொட்டுவோம்
மேல
தாளம் கொட்டுவோம் கூடுவோம் ஆடுவோம் பாடுவோம்
புதுப் பாட்டு பாடுவோம் -
2 - முன்னோர்கள்
தானா தந்தான் னானானே
Ch -தந்தான்னே
தானா தந்தான் னானானே
ஊh-தந்தான்னே - 2
1. இந்நாளாம் என்னாளும் நன்னாளாய் மாறிட
வார்த்தையான
நம் சாமி மனு உருவாய்ச்சி
மண்ணகமே விண்ணாகி நாமெல்லாம்
மகிழ்ந்திட சொன்னபடி இயேசுசாமி நம்மிடையே வந்தாச்சு
மனம் எல்லாம் மாற வேணும்
மக்கள் ஒன்னு சேர வேணும்
இறைவன் இயேசு நமக்கு தந்த
இறையரசை
படைக்க வேண்டும்
அன்பியமாய்
வாழ வேணும்
அன்புடன் இருக்க வேணும்
இயேசு சாமி கொண்டு வந்து
இறையாச்சி
படைக்க வேண்டும் - முன்னோர்கள்
2. காலத்தால் அழியாத காவியமாய்
ஆகிட்ட
அன்புருவாய்
நம்ம இயேசு அகிலத்தில் பிறந்தாச்சு
வெங்கள ஓசை
மெல்லிசையில் திங்கள் வந்து பாடிட
ஆண்டோரும் சான்றோரும் பணிந்து காண வந்தாச்சு
இதயம்
எல்லாம் இணைய வேணும்
இறைவன்
அங்கு பிறக்க வேணும்
நற்செய்தி
காட்டும் வழியில்
நாள்தோறும்
நடக்க வேணும்
நாவில் உண்மை பேச வேணும்
நற்செயல்கள் புரிய வேணும்
நல்ல தேவன் மக்கள் என்று
சாட்சியாக வாழ வேணும் - முன்னோர்கள்
Fr. Thanjai Domi
Comments
Post a Comment