ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே
ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே
மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே - 2
பிதாவின் ஏகசுதனான
மைந்தனே
மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே - 2
பாடிக் கொண்டாடுவோம் போற்றி
ஆர்ப்பரிப்போம்
இம்மானுவேலனை
பணிந்திடுவோம் - 2
1. இம்மானுவேலன் தேவன்
நம்மோடு
இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால்
தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை
என்
வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால் - (2) - பாடி
2. தேவன் நம் மீது அன்பை காட்டிட
தந்தாரே தம் குமாரனை பலியாக
பாவம் போக்கும் பரிகாரியான
இயேசுவே
வந்துதித்தாரே பூவில் மனுவுருவாக - (2) - பாடி
- Pr. Solomon Robert
Comments
Post a Comment