26 November 2024

வெண்ணிலவே உன்னை ஒன்று கேட்கவா

வெண்ணிலவே உன்னை ஒன்று கேட்கவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வெண்ணிலவே உன்னை ஒன்று கேட்கவா

                        நட்சத்திரமே உன்னை ஒன்று கேட்கவா

            மன்னவனின் திருமுகம் காணவா

            மகிபனின் மகத்துவம் பாடவா - 2

                        உனையே மறந்து நினைவே துறந்து

                        ஆயிரம் ஆயிரம் கானங்களில்

                        புதுப்புது தாள நாதங்களில்

                        மகவாய் பிறந்தவரை புகழ்வாய்

                        மகிழ்வுடனே துதிப்பாய் - வெண்ணிலவே

 

1.         மார்கழி நாயகனைப் பாடவா

            கடுங்குளிர் வேளையிலும் பாடவா

            விண்ணுலகம் துறந்தோனைப் பாடவா

            சிந்தையிலே கலந்தோனைப் பாடவா

            இன்னிசையில் இயேசுவைப் பாடவா

            இனிய சுரங்களிலே போற்றவா

                        மகவாய் பிறந்தவரை புகழ்வாய்

                        மகிழ்வுடனே துதிப்பாய் - வெண்ணிலவே

 

2.         மனிதனின் பாவம் போக்க வந்தவரைப் பாடவா

            மகிமையை துறந்து வந்த மகத்துவனைப் பாடவா

            கருணையின் வடிவாய் வந்த கர்த்தரையேப் போற்றவா

            கல்வாரியில் மீட்ப்பைத் தரவே அவதரித்தார் போற்றவா

            இதயத் துடிப்பில் என்னையே மறந்தேன்

            உயிரில் கலந்த அன்பைத் துதிப்பேன்

            அதிசயம் இதுவே...

                        மகவாய் பிறந்தவரை புகழ்வாய்

                        மகிழ்வுடனே துதிப்பாய் - வெண்ணிலவே

 

 

 

- Dr. Beneson Thilagar Christadoss.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...