விண்ணும் மண்ணும் மகிழும் பொன்னான நாள் இதுவே
விண்ணும் மண்ணும் மகிழும் பொன்னான நாள் இதுவே
பூவுலகு எங்கும்
பூபாளம் கேட்கின்றதே! - 2
பாலகன் பிறந்தார் மாடடைக்குடிலில்
மன்னவன் மலர்ந்தார் மாமரியின் மடியில் - 2
உன்னதத்தில் கடவுளுக்கு
மாட்சி
உண்டாகுதே - 2
உலகினில் அவருக்கு உகந்தோருக்கு
(இன்று) அமைதி உண்டாகுதே
Happy Happy Happy
Christmas
Merry Merry Merry
Christmas
1. ஊரெங்கும் பேரொளி அவர் மாட்சியே!
பாரெங்கும்
இனி என்றும் அவர் ஆட்சியே - 2
விடிவெள்ளி இவர்தானே
அருள்வாழ்விலே
இருளில்லை ஒருபோதும்
நம்வாழ்விலே (இனி) - (2)
மறைபொருளாகிடும்
விண்மலரே! மாதவமே என் மாபரனே - (2)
பிறந்து வா... பிறந்து வா... என் உள்ளக்குடிலில் பிறந்து வா... - (2)
Happy Happy Happy Christmas
Merry Merry Merry
Christmas
2. திசையெங்கும் அவரது
திருக் காட்சியே!
இனியெங்கும்
நாம் என்றும் அவர் சாட்சியே - 2
உயிரூட்டும்
அருளாளன் இவர்தானன்றோ
வலுவூட்டும்
புதுவாழ்வு தருவாரன்றோ! - (என்றும்) - (2)
திருஅவை வளம்
தரும் அருள்நதியே!
திருவருளே என்
வானமுதே - 2
பிறந்து வா... பிறந்து வா... என் உள்ளக்குடிலில் பிறந்து வா... - (2)
Happy Happy Happy
Christmas
Merry Merry Merry
Christmas
Comments
Post a Comment