நீர் இல்லாத நாள் எனக்கு வேண்டாம் தேவா
நீர் இல்லாத நாள் எனக்கு வேண்டாம்
தேவா
நீர் சொல்லாத வழியில் நானும்
நடக்க வேண்டாம் தேவா - 2
1. மனிதனின் யோசனை
மாறிடும் போதனை
எதை நம்பி நான் இன்று செல்வதோ
வரும் வழி சோதனை அறியாத வேதனை
விடுவிக்க யார் எனக்குள்ளரோ
முன்னால் சென்றால் நான் பின்னால் தொடர்வேன்
- நீர்
என்னுடன் வந்தால் இந்த உலகை வெல்லுவேன்
இதுதானே என் வேண்டுதல்
இதை
அளித்தீரே எனக்காறுதல் - நீர்
இல்லாத
2. மேகஸ்தம்பமாய்
அக்கினிஸ்தம்பமாய்
உம் ஜனத்தோடு
அன்று நடந்தீரே
பூமியின் ஜனங்களில்
எனக்கு சிறப்பென்ன
தேவன் நீர் என்னுடன் வருவதே
வல்ல கரத்தால் என்னை நடத்திச் செல்லும்
- நான்
விலகி சென்றாலும் இழுத்துக் கொள்ளும்
இதுதானே என் வேண்டுதல்
இதை
அளித்தீரே எனக்காறுதல் - நீர்
இல்லாத
3. விலகிட மாட்டேன் கைவிட மாட்டேன்
என்றவர் உண்மை உள்ளவரே
தாங்கிடுவீரே ஏந்திடுவீரே
காத்திடும் எந்தன் கன்மலையே
கிருபையின் கரத்தாலே அணைத்துக் கொள்ளும்
சிலுவையின் நிழலாலே மறைத்துக் கொள்ளும்
மணவாளனே என் இயேசுவே
என் துணையானீர் மனுவேலனே - நீர் இல்லாத
- John & Vasanthy
https://www.youtube.com/watch?v=SBCS10Hzjug
Comments
Post a Comment