பல்லவி
அன்னை மா மரியின்
அமலன் இயேசு பாலன்
நன்றே அவதரித்தார்
நமக்காக இந்நிலமேல் - 2
அன்னை மா மரியின்
சரணங்கள்
1. மனித பாவம் போக்கவே மானுவேலனாய் உதித்தார்
புனித குமாரன் இயேசுவை புகழ்ந்து போற்றித்
துதிக்கிறோம்
தன் மகிமையைத் துறந்து தாழ்மைக் கோலம்
எடுத்து
கந்தைதனை பொதிந்தே கர்த்தர் பசும் புல்லணையில்
- அன்னை மா
2. உன்னதத்தில் மகிமையும் உலகிலே சமாதானமும்
மனிதர் மேல் பிரியமும் உண்டாவதாக என்றே
விண்ணின் தூதர் சேனைகள் வானின்று முழக்கமுடன்
மனுக்குமாரன் இயேசுவை மண்ணோர் கேட்கத்
துதிக்கிறார் - அன்னை மா
- Tmt. Maragadhavalli Duraipandian, mother of Kalaimamani D. A. Thanapandian
No comments:
Post a Comment