18 November 2024

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

பல்லவி

          இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே

            தயவையும் நிறைவையும் நித்திய வாழ்வையும் என்றென்றும் தருபவரே

            பரிசுத்தமும் நீதியையும் ஒருங்கிணைந்து சாவாமை உள்ளவரே,

            பரலோகத்தின் திறவுகோலை உடையவராய் என்றென்றும் இருப்பவரே

 

அனுபல்லவி

                        ஆராதிப்பேன் தொழுதிடுவேன்  புகழ்ந்திடுவேன் இயேசைய்யா,

                        போற்றிடுவேன் வணங்கிடுவேன் உயர்த்திடுவேன் இயேசைய்யா,

                        உம்மை உயர்த்திடுவேன் இயேசைய்யா

 

1.         துக்கமும் வெட்கமும் எப்பக்கம் சூழ்ந்தாலும் உம் கரம் தாங்குதைய்யா,

            ஏக்கமும் நோக்கமும் என் வாழ்வில் நிறைவேற நீர் ஊக்கம் தந்தீரய்யா

            என் ஆசையும் என் ஆர்வமும் என் ஆற்றலும் நீரைய்யா,

            என் தேவையும் என் தேகமும் என் தேடலும் நீரைய்யா - ஆராதிப்பேன்

 

2.         நாசமும் மோசமும் என் வாழ்வில் வந்தாலும் உம் நேசம் தாங்குதைய்யா

            வேஷம் தறித்தென்னை மோசம் போக்கினாலும் உம் பாசம் தேற்றுதைய்யா

            உம் பாதமும் உம் வேதமும் என் பேதம் நீக்குதைய்யா

            உம் சித்தமும் உம் இரத்தமும் எனை சுத்தமாக்குதைய்யா - ஆராதிப்பேன்.

 

 

- Bro. S. Selvan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...