15 September 2018

அருள் மாரி எங்குமாக

பாமாலை:295

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Lord I hear of showers of blessing

Etiam Et Mihi.  SS 485

 

295                                                     8, 7, 8, 7 with refrain

 

1.       அருள் மாரி எங்குமாக

                        பெய்ய, அடியேனையும்

            கர்த்தரே, நீர் நேசமாக

                        சந்தித்தாசீர்வதியும்;

            என்னையும், என்னையும்

                        சந்தித்தாசீர்வதியும்.

 

2.         என் பிதாவே, பாவியேனை

                        கைவிடாமல் நோக்குமேன்;

            திக்கில்லா இவ்வேழையேனை

                        நீர் அணைத்துக் காருமேன்;

                        என்னையும், என்னையும்

                        நீர் அணைத்துக் காருமேன்.

 

3.         இயேசுவே, நீர் கைவிடாமல்

                        என்னைச் சேர்த்து ரட்சியும்;

            ரத்தத்தாலே மாசில்லாமல்

                        சுத்தமாக்கியருளும்;

                        என்னையும், என்னையும்

                        சுத்தமாக்கியருளும்.

 

4.         தூய ஆவி கைவிடாமல்

                        என்னை ஆட்கொண்டருளும்;

            பாதை காட்டிக் கேடில்லாமல்

                        என்றும் காத்துத் தேற்றிடும்;

                        என்னையும், என்னையும்

                        என்றும் காத்துத் தேற்றிடும்.

 

5.         மாறா சுத்த தெய்வ அன்பும்,

                        மீட்பர் தூய ரத்தமும்,

            தெய்வ ஆவி சக்திதானும்

                        மாண்பாய்த் தோன்றச் செய்திடும்;

                        என்னிலும், என்னிலும்

                        மாண்பாய்த் தோன்றச் செய்திடும்.

 

 

2 comments:

  1. இது ஒரு அருமையான இறை வேண்டல் ஆகும். நன்றி.

    ReplyDelete

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...