இதோ உன் நாதர் செல்கின்றார்
Behold the Master passeth by
Gloucester
158 L.M
1. இதோ,
உன் நாதர் செல்கின்றார்!
உன்னை அழைக்கும், அன்பைப் பார்!
'வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்'
என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய்
2. துன்பத்தில் உழல்வோனே நீ
மோட்சத்தின் வாழ்வைக் கவனி;
பற்றாசை நீக்கி, விண்ணைப் பார்;
இதோ, உன் நாதர் செல்கின்றார்!
3. அவ்வழைப்பை இப்பக்தன் தான்
கேட்டே, செல்வத்தை வெறுத்தான்;
சீர் இயேசுவின் சிலுவைக்காய்
எல்லாம் எண்ணினான் நஷ்டமாய்.
4. நாடோறும் என் பின் செல் என்னும்
அழைப்பு அவன் நெஞ்சிலும்,
உற்சாகத்தோடுழைக்கவே,
திட சித்தம் உண்டாக்கிற்றே.
5. நாடோறும் நம்மை நாதர் தாம்
அழைத்தும் தாமதம் ஏனாம்?
ஏன் மோட்ச வாழ்வைத் தள்ளுவோம்?
ஏன் லோக மாயை நாடுவோம்?
6. மத்தேயு பக்தன் போலவும்
எல்லாம் வெறுத்து நாங்களும்
நல் மனதோடு உம்மையே
பின்பற்ற ஏவும், கர்த்தரே.
Comments
Post a Comment