இராப் பகலும் ஆள்வோராம்
Arise arise my soul
Melcombe
29 L.M.
இராப்
பகலும் ஆள்வோராம்
பராபரனைப் போற்றிடு;
முன்
செல்வாய் இந்த நாளினில்,
உன் மாட்சி கர்த்தர் தொழுவாய்.
2. இராவின்
இன்பம் அவரே,
பகலில் இன்பம் சேவையே;
திருவடியில் மகிழ்வும்
திருப்தியும் ராப்பகலும்.
3. நடப்பது
யாதெனினும்
படைப்பாய் அவர் பாதத்தில்!
அவரைப் பற்றி பக்தியாய்
ஆன்மமே முழு மனதாய்.
4. பூலோகம்
எங்கும் காண்பாயோ
மேலான நண்பர் இவர்போல்?
கருத்துடன் நடத்திடும்
பரன் இவரைப் பின் செல்வாய்.
5. ரட்சிப்பார்
சேர்ந்து தாங்குவார்,
பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்;
சஞ்சலம் சோர்வு நீக்குவார்,
தஞ்சம் தந்துன்னைத் தேற்றுவார்.
6. கருவி
நீ, கரம் அவர்,
சருவம் அவர் திட்டமே;
உன் சுய சித்தம் ஓய்த்திடு,
முன்செல் இந்நாள் அவரோடு.
Comments
Post a Comment