உன் சஞ்சலத்தை விட்டு


56. Ellacombe; Aurelia                                                         7s, 6s.

"Hail, Thou blessed Saviour!"

1.       உன் சஞ்சலத்தை விட்டு,
                        கர்த்தாவின் சபையே,
            என் மீட்பரைத் துதித்து,
                        ஆனந்தங் கொள்வாயே;
            நீ நம்பி எதிர்பார்த்த
                        உன் மீட்பர் பிறந்தார்;
            கிலேசம் யாவும் ஆற்ற
                        உன்னோடு தங்குவார்.

2.         ஆ, யேசுவே, நீர் வாழ்க!
                        பிதாவின் சுதனே,
            மா ஏழை நரனாக
                        பிறந்த தேவனே,
            விண்ணோருக்காதி கர்த்தர்,
                        மண்ணில் பிறந்தீரோ?
            அநாதியான நித்தர்,
                        குழந்தை ஆனீரோ?

3.         நான் வானத்துக்கு ஏற
                        பூலோகத்தில் வந்தீர்;
            நான் தூதரோடு சேர
                        நரர்க்குள் தங்கினீர்;
            நான் வாழ உம்மை தாழ்த்தி,
                        பிழைக்க மரித்தீர்;
            நான் என்றும் உம்மை வாழ்த்தி
                        வணங்க, ரட்சிப்பீர்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே