25 September 2018

எங்கள் ஊக்க வேண்டல் கேளும்


Holy Father in Thy mercy
Calrnbrook Minto

35                                                                       8, 5, 8, 3

            எங்கள் ஊக்க வேண்டல் கேளும்
                        தூய தந்தையே;
            தூரம் தங்கும் எங்கள் நேசர்
                        காருமே.

2.         மீட்பரே, உம் பிரசன்னத்தால்
                        பாதை காட்டுவீர்;
            தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்
                        சோர்வில் நீர்.

3.         துன்பம் தோன்றித் துணையின்றி
                        மோசம் நேர்கையில்,
            அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்
                        சோகத்தில்!

4.         மீட்பின் மா மகிழ்ச்சி அவர்
                        பலம் திடனாய்
            அன்போடும்மைப் போற்றச் செய்வீர்
                        நாளுமாய்.

5.         தூய ஆவி போதனையால்
                        தூய்மையாக்குவீர்;
            போரில் வெற்றி பெற அருள்
                        ஈகுவீர்.

6.         பிதா மைந்தன் தூய ஆவி
                        விலகாதேயும்;
            அருள் அன்பு மீட்பு காவல்
                        ஈந்திடும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...