21 September 2018

இயேசு நாதா காக்கிறீர்


Jesus Saviour pilot me
SS 556

316                                            7, 7, 7, 7, 7, 7

1.       இயேசு நாதா! காக்கிறீர்,
            இளைப்பாறச் செய்கிறீர்,
            மோசம் நேரிடாமலும்,
            பாதம் இடறாமலும்,
            என்னைத் தாங்கி நிற்கிறீர்;
            நேச நாதா! காக்கிறீர்.

2.         வாரிபோன்ற லோகத்தில்
            யாத்திரை செய்து போகையில்,
            சூறைக் காற்று மோதினும்,
            ஆழி கோஷ்டமாயினும்,
            அமைதல் உண்டாக்குவீர்;
            நேச நாதா! காக்கிறீர்!

3.         சற்றுத் தூரம் செல்லவே,
            மோட்ச கரை தோன்றுமே!
            துன்பம் நீங்கி வாழுவேன்;
            இன்பம் பெற்று போற்றுவேன்;
            அது மட்டும் தாங்குவீர்;
            நேச நாதா! காக்கிறீர்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...