என்னை விடாதேயும்


Ach Gott verlass mich nicht
Bavarian 138

321                                                   6, 7, 6, 7, 6, 6, 6, 6

1.                 என்னை விடாதேயும்;
            கர்த்தாவே, மோட்சம் மட்டும்
                        உமது கைகளால்
            இப்பிள்ளையை நடத்தும்
                        மகா இரக்கமாய்;
                        நீர் என் வெளிச்சமும்
                        என் பாதுகாப்புமே;
                        என்னை விடாதேயும்.

2.                     என்னை விடாதேயும்;
            நான் பாவத்தில் விழுந்து
                        கெடாப்படி நீர்
            ஒத்தாசையாய் இருந்து,
                        நீர் உமதாவியால்
                        என்னைத் திடத்தவும்,
                        அன்புள்ள கர்த்தரே;
                        என்னை விடாதேயும்.

3.                     என்னை விடாதேயும்
            என்றும்மைக் கருத்தாக
                        நான் கெஞ்சிக் கேட்கிறேன்;
            பிசாசு பலமாக
                        என்னை நெருங்கினால்
                        நீர் துணையாயிரும்;
                        என் சோதனைகளில்
                        என்னை விடாதேயும்.

4.                     என்னை விடாதேயும்;
            அன்பாக என்னைப் பாரும்,
                        என் கையின் வேலையை
            ஆசீர்வதித்து வாரும்;
                        நீர் கற்பித்தபடி
                        எல்லாம் நான் செய்யவும்,
                        என் வேலை வாய்க்கவும்,
                        என்னை விடாதேயும்.

5.                     என்னை விடாதேயும்;
            உமக்குச் சொந்தமாகப்
                        பிழைத்து, என்றைக்கும்
            நான் விசுவாசமாக
                        உம்மில் நிலைக்கவே
                        என்னைக் காத்தருளும்;
                        கடை இக்கட்டிலும்
                        என்னை விடாதேயும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு