25 September 2018

என் ஆண்டவா இப்போரில் நான்


Rockingham

379                                                                             L.M.

1.         என் ஆண்டவா, இப்போரில் நான்
            விழாது இம் பிரசன்னத்தால்
            நெருங்கி என்னைத் தாங்கிடும்,
            நேராய் நடத்தும் உம் அன்பால்.

2.         என் ஆவல் என்றும் உம்மிலே;
            என்றாலும் என்னைச் சூழ்ந்திடும்
            பிசாசு மாம்சம் லோகத்தால்
            மாளாது பெலன் தந்திடும்.

3.         ஐயோ, நான் பெலவீனனே!
            ஓயாது வீழ்ந்து சாகின்றேன்;
            என் இயேசுவே, என் ஜீவனே!
            உன் பாதம் தஞ்சம் அண்டினேன்.

4.         நற் போராட்டம் போராடிட,
            ஓட்டத்தை உம்மில் முடிக்க,
            விண் கிரீடம் பெற்று பாடிட
            விடாது தாங்கி நடத்தும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...