இயேசுவே நீர்தாமே


Jesu meine Freude
Bavarian

259                                                     6, 6, 5, 6, 6, 5, 7, 8, 6

1.       இயேசுவே, நீர்தாமே
            என் மகிழ்ச்சியாமே,
                        நீர் என் பூரிப்பு;
            என் மனம் நாள்தோறும்
            ஆசை வாஞ்சையோடும்
                        உம்மை நோக்குது.
            கர்த்தரே, உலகிலே
            உம்மை யன்றி வாழ்விராது,
                        இன்பமும் காணாது.

2.         நல் மறைவின் கீழே
            நான் ஒதுங்க, நீரே
                        என் அரண்மனை;
            சாத்தான் வர்மிக்கட்டும்,
            எதிரி சீறட்டும்,
                        இயேசு என் துணை.
            திகிலும் பயங்களும்
            பாவ நரகக்கெடியும்
                        இயேசுவால் தணியும்.

3.         வலு சர்ப்பத்துக்கும்
            சாவின் பற்களுக்கும்
                        நான் திடுக்கிடேன்.
            லோகமே, விரோதி;
            நான் சங்கீதம் ஓதி
                        தோத்திரிக்கிறேன்.
            தெய்வக்கை என் சலுகை;
            இனிச், சாத்தான் கூட்டத்தார்கள்
                        மௌனம் அடைவார்கள்.

4.         பொக்கிஷங்கள் யாவும்
            வீணும் விருதாவும்;
                        இயேசு என் கதி,
            லோகத்தார் இச்சிக்கும்
            வாழ்வு குமிழிக்கும்
                        கானற்கும் சரி,
            அதை ஏன் தொடருவேன்;
            இயேசுவோடடைந்த தாழ்வு
                        பெரிதான வாழ்வு.

5.         மனமே,  நீ ஆறு,
            பூரிப்பாகப் பாடு,
                        இயேசு சேர்ந்தாரே;
            அத்தால் எந்தப் பாடும்
            தித்திப்பாக மாறும்.
                        நான் உலகிலே
            நிந்தையும் நிஷ்டூரமும்
            உத்தரித்தும், இயேசுதாமே
                        என் மகிழ்ச்சியாமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு