21 September 2018

இயேசுவின் கைகள் காக்க


Safe in the Arms of Jesus
SS 57 (In Sinu Jesus)

353                                               7, 6, 7, 6 D with refrain

1.       இயேசுவின் கைகள் காக்க,
            மார்பினில் சாருவேன்;
            பேரன்பின் நிழல் சூழ
            அமர்ந்து சுகிப்பேன்.
            பளிங்குக் கடல் மீதும்
            மாட்சி நகர் நின்றும்
            தூதரின் இன்ப கீதம்
            பூரிப்புண்டாக்கிவிடும்.

                        இயேசுவின் கைகள் காக்க
                        மார்பினில் சாருவேன் ;
                        பேரன்பின் நிழல் சூழ
                        அமர்ந்து சுகிப்பேன்.

2.         இயேசுவின் கைகள் காக்க,
            பாழ் லோகின் கவலை
            சோதனை பாவக் கேடும்
            தாக்காது உள்ளத்தை;
            கஷ்டம் துக்கம் கண்ணீரும்
            காணாமல் நீங்குமே;
            வதைக்கும் துன்பம் நோவும்
            விரைவில் தீருமே.

3.         இயேசு என் இன்பக் கோட்டை
            எனக்காய் மாண்டோரை
            சார்ந்தென்றும் நிற்பேன், நீரே
            நித்திய கன்மலை.
            காத்திருப்பேன் அமர்ந்து
            ராக்காலம் நீங்கிட,
            பேரின்ப கரை சேர,
            மா ஜோதி தோன்றிட.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...