ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்


O what the joy and the glory must be
O quanta qualla

402                                                                            10, 10, 10, 10

1.         ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
            பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?
            வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்;
            ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.

2.         ராஜ சிங்காசன மாட்சிமையும்
            ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
            இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
            அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?

3.         மெய் சமாதானத் தரிசனமாம்
            அக்கரை எருசலேம் என்போம் நாம்
            ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
            வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.

4.         சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
            தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?
            பேரருள் ஈந்திடும் ஆண்டவா, நீர்
            பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.

5.         ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,
            விடிதல் முடிதல் இல்லாததாம்;
            தூதரும் பக்தரும் ஓயாமலே
            ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே.

6.         பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
            மீண்டு, நம் தேசம் போய்ச் சேரும்வரை,
            எருசலேமை நாம் இப்பொழுதும்
            வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.

7.         தந்தையினாலும், குமாரனிலும்
            ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;
            திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
            சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு