தூதாக்கள் விண்ணில் பாடிய


48. Dunfermline: Aristides, St. Peter:              C.M.

"Nun danket all und bringet Ehr"

1.       தூதாக்கள் விண்ணில் பாடிய
                        தூய பிதாவையே
            நன்றாகத் துதி, சகல
                        நரரின் கூட்டமே.

2.         அதிசயங்கள் செய்கிற
                        பராபரனைப் போல்
            நிகருண்டோ, என்றுத்தம
                        கருத்தாய்ப் போற்றுமே.

3.         இந்நாள் வரைக்கும் நமக்கு
                        சுகம் அருளினார்;
            நீங்கா இக்கட்டைத் தமது
                        நேசத்தால் நீக்கினார்.

4.         நாம் செய்துவந்த பாவத்தை
                        நிவிர்த்தியாக்கினார்,
            அகோர ஆக்கினைகளை
                        அன்பாய் அகற்றினார்.

5.         பூமியில் சமாதானத்தை
                        அநுக்ரகிக்கிறார்;
            நாம் செய்யும் அவர் வேலையை
                        ஆசீர்வதிக்கிறார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே