உந்தன் சொந்தமாக்கினீர்


Thine for ever God of loves
Newington

299                                                     7, 7, 7, 7

1.         உந்தன் சொந்தமாக்கினீர்,
            அடியேனை நோக்குவீர்
            பாதுகாரும், இயேசுவே
            என்றும் தீங்கில்லாமலே.

2.         நான் உம் சொந்தம் லோகத்தில்
            மோட்ச யாத்திரை செய்கையில்
            ஜீவன், சத்தியம், வழியும்,
            நீரே ரட்சித்தாண்டிடும்.

3.         நான் உம் சொந்தம் ரட்சியும்;
            மட்டில்லாத பாக்கியமும்,
            அருள் நாதா, நல்கினீர்;
            இன்னமும் காப்பாற்றுவீர்.

4.         நான் உம் சொந்தம்; நித்தமாய்
            தாசனை நீர் சுகமாய்த்
            தங்கச் செய்து மேய்ப்பரே,
            காத்தும் மேய்த்தும் வாருமே.

5.         நான் உம் சொந்தம் தேவரீர்
            வழி காட்டிப் போஷிப்பீர்;
            பாவம் நீங்கக் கழுவும்,
            ஆயுள் முற்றும் நடத்தும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு