இயேசுவே நீர் தாழ்ந்தோரான
Liebster Jesu in den Tagen
Bavarian 97
368 8, 7, 8, 7, 8, 8, 7, 7.
1. இயேசுவே,
நீர் தாழ்ந்தோரான
நாட்களில் கும்போடே நீர்,
“என்னால் நோயைத் தீர்ப்பதான
சத்து பாய்ந்தது” என்றீர்.
இப்போ துன்னதத்தில் ஆளும்
இராஜாவான நீர், இந்நாளும்
சக்தியை என் பேரிலும்
பாயப்பண்ணியருளும்.
2. உமக்கதிகாரம் யாவும்
தரப்பட்டிருக்குதே;
தேவரீரை எந்த நாவும்
கர்த்தர் என்கவேண்டுமே,
யாவும் உமக்குப் பணியும்,
பெருமை எல்லாம் அழியும்,
உம்மால் கடைசியிலே
சாவும் வெல்லப்படுமே.
3. ஆகையாலே தேவையான
மீட்பெப்போதும் உம்மாலாம்;
இதற்கு நீர் செய்ததான
அற்புதங்கள் சாட்சியாம்;
ஏனென்றால் அவரவர்க்கு
அநுகூலராவதற்கு
மனிதரிடத்திலே
தயவாக வந்தீரே.
4. ஆ, இவ்வேழைக்கும் இரங்கும்,
தெய்வ பரிகாரியே,
என்னைப் பாரும், என்னில் எங்கும்
நோவும் ரோகமும் உண்டே,
பாவமும் பொல்லா வினையும்
நீங்க என்மேல் கையை வையும்;
சொஸ்தமாகென்றெனக்கும்
நீர் அன்பாகச் சொல்லவும்.
5. உம்முடைய வஸ்திரத்தின்
ஓரத்தைத் தொடுகிறேன்;
நீர் ரட்சிக்கிற பலத்தின்
சத்துவத்தை நம்புவேன்;
நீர் உரைத்ததைப் பிடிப்பேன்,
உமக்கென்னை ஒப்புவிப்பேன்;
மீட்போம் என்று சொன்னீரே,
மீட்டுக்கொள்ளும், இயேசுவே
6. ஆமேன், என் ஜெபத்தைக் கேட்பீர்,
என்னை சுத்தம் பண்ணுவீர்;
என்னை நோக்கி என்னைச் சேர்ப்பீர்,
தேற்றி அன்பைக் காண்பிப்பீர்,
அத்தால் நித்த நித்தமாக
உமக்குப் புகழ்ச்சியாக
தோத்திரஞ் செலுத்துவேன்;
ஆமேன்,
ஆமேன் என்கிறேன்.
Comments
Post a Comment