இளமை முதுமையிலும்


For all Thy saints a noble throng
St. James

155                                                                                   C.M.

1.       இளமை முதுமையிலும்
                        பட்டயம் தீயாலே
            மரித்த பக்தர்க்காகவும்
                        மா ஸ்தோத்திரம், கர்த்தரே.

2.         உம் நல்லழைப்பைக் கேட்டதும்,
                        யாக்கோபப்போஸ்தலன்
            தன் தந்தை வீட்டை நீங்கியும்,
                        உம்மைப் பின்பற்றினன்.

3.         மற்றிரு சீஷரோடுமே
                        யவீர் வீட்டுள் சென்றான்,
            உயர் மலைமேல் ஏறியே
                        உம்மாட்சிமை கண்டான்.

4.         உம்மோடு காவில் ஜெபித்தும்
                        உம் பாத்திரம் குடித்தான்;
            எரோதால் மாண்டு மீளவும்
                        உம்மைத் தரிசித்தான்.

5.         பூலோக இன்ப துன்பத்தை
                        மறந்து நாங்களும்
            விண்ஸ்தலம் நாட அருளைக்
                        கர்த்தாவே, அளியும்.

6.         நாங்கள் உம் பாத்திரம் குடித்தால்
                        நீர் வரும் நாளிலே
            வாடாத கிரீடத்தை உம்மால்
                        அணிந்து கொள்வோமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே