களிப்புடன் கூடுவோம்


45. Harts: Monkland.

"Let us with a gladsome mind"

1.         களிப்புடன் கூடுவோம்,
            கர்த்தரை நாம் போற்றுவோம்;
            அவர் தயை என்றைக்கும்
            தாசரோடு நிலைக்கும்.

2.         ஆதி முதல் தேவனே
            நன்மை யாவுஞ் செய்தாரே;
            அவர் தயை என்றைக்கும்
            மாந்தர் மேலே சொரியும்.

3.         இஸ்ரவேலைப் போஷித்தார்,
            நித்தம் வழி காட்டினார்;
            அவர் தயை என்றைக்கும்
            மன்னாபோலே சொரியும்.

4.         வானம், பூமி புதிதாய்ச்
            சிஷ்டிப்பாரோ ஞானமாய்;
            அவர் தயை என்றைக்கும்
            அதால் காணும் யாருக்கும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே