இப்போ நாம் பெத்லெகேம் சென்று
Let us now go to Bethlehem
Christmas Caral
57 8, 6, 8, 6,
6, 6, 8, 6
1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான
நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
வான்
ஜோதி மின்னிட
தீவிரித்துச் செல்வோம்.
தூதர்
தீங்கானம் கீதமே
கேட்போம் இத்தினமாம்.
2. இப்போ
நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான
நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
தூதரில்
சிறியர்
தூய தெய்வ மைந்தன்;
உன்னத
வானலோகமே
உண்டிங் கவருடன்.
3. இப்போ
நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான
நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
நம்மை
உயர்த்துமாம்
பிதாவின் மகிமை!
முந்தி
நம்மில் அன்புகூர்ந்தார்;
போற்றுவோம் தெய்வன்பை.
4. அப்போ
நாம் ஏகமாய்க் கூடி
விஸ்வாசத்தோடின்றே
சபையில்
தங்கும் பாலனின்
சந்நிதி சேர்வோமே;
மகிழ்ந்து
போற்றுவோம்
ஜோதியில் ஜோதியே!
கர்த்தா!
நீர் பிறந்த தினம்
கொண்டாடத்
தகுமே.
Comments
Post a Comment