இம்மையின் துக்கம் துன்பம்


Brief life is here our portion
Kocher

392                                         7, 6, 7, 6

1.       இம்மையின் துக்கம், துன்பம்
                        கண்ணீரும் மாறிப்போம்;
            முடிவில்லாத இன்பம்
                        பரத்தில் பெறுவோம்.

2.         இதென்ன நல்ல ஈடு,
                        துன்பத்துக்கின்பமா?
            பரத்தில் நிற்கும் வீடு
                        மரிக்கும் பாவிக்கா?

3.         இப்போது விழிப்போடு
                        போராட்டம் செய்குவோம்;
            விண்ணில் மகிழ்ச்சியோடு
                        பொற் கிரீடம் சூடுவோம்

4.         இகத்தின் அந்தகார
                        ராக்காலம் நீங்கிப்போம்;
            சிறந்து ஜெயமாக
                        பரத்தில் வாழுவோம்.

5.         நம் சொந்த ராஜாவான
                        கர்த்தாவை நோக்குவோம்;
            கடாட்ச ஜோதியான
                        அவரில் பூரிப்போம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு