21 September 2018

இயேசு ஸ்வாமி உமது


Liebster Jesu wir sind hier
Bavarian 106

17                                                                    7, 8, 7, 8, 8, 8

1.                 இயேசு ஸ்வாமி, உமது
            வசனத்தின் பாலைத் தேட
                        வந்தோம்; எங்கள் மனது
            மண்ணைவிட்டு உம்மைச் சேர,
            எங்கள் சிந்தையை நீர் முற்றும்
            தெய்வ சொல்லுக்குட்படுத்தும்

2.                     உமதாவி யெங்களில்
            அந்தகாரத்தை அறுத்து
                        ஒளியை வீசாராகில்,
            புத்திக் கண்ணெல்லாம் இருட்டு;
            சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
            உம்முடைய நடப்பிப்பு .

3.                     மகிமையின் ஜோதியே,
            ஸ்வாமி, நாங்கள் மாயமற
                        பாடிக் கெஞ்சி, நெஞ்சிலே
            வசனத்தைக் கேட்டுணர,
            வாய் செவி மனமும் கண்ணும்
            திரவுண்டுபோகப் பண்ணும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...