24 September 2018

உங்களைப் படைத்தவர்


Maldstone

279                                                                           7, 7, 7, 7 D

1.         உங்களைப் படைத்தவர்
            சருவ தயாபரர்;
            தம்மில் வாழ்ந்து ஜீவிக்க,
            என்றும் தம்மோடிருக்க
            ஆசைப்பட்டோர் உங்களைப்
            பார்த்து, “என் சிநேகத்தை
            தள்ளிவிட்டு நிற்பதார்?
            திரும்புங்கள்”, என்கிறார்.

2.         உங்களை ரட்சித்தவர்
            தெய்வ சுதனானவர்;
            திரு ரத்தம் சிந்தினார்,
            சிலுவையில் மரித்தார்;
            “நீங்கள் வீணில் சாவதேன்!
            மரித்துங்களை மீட்டேன்,”
            என்று கூறி நிற்கிறார்,
            “திரும்புங்கள்,” என்கிறார்.

3.         உங்களை நேசிப்பவர்
            தூய ஆவியானவர்;
            நயம் பயம் காட்டினார்,
            குணப்பட ஏவினார்;
            “தயை பெற வாரீரோ,
            மீட்பைத் தேடமாட்டீரோ!”
            என்றிரங்கிக் கேட்கிறார்,
            “திரும்புங்கள்,” என்கிறார்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...