மோட்சலோக நாதரே


50. Innocents; Culbach                                                (373)   7s

"The Author of our being"

1.          மோட்சலோக நாதரே,
            நித்தியநேசம் உள்ளோரே,
            ஜீவகோடிகள் எல்லாம்
            தேவரீரின் செய்கை ஆம்.

2.         என்னைப் பிறப்பித்தவர்,
            சீர்படுத்தி ஆள்பவர்,
            சாவுமட்டும் காப்பவர்,
            மோட்ச வீட்டில் சேர்ப்பவர்.

3.         எல்லாத் துன்பம் இன்பமும்
            எளிமையும் செல்வமும்
            துக்கமும் சந்தோஷமும்
            தேவனே உம்மால் வரும்.

4.         நன்மைக்காதி மூலமே,
            எனக்குள்ள யாவுமே
            உமக் கொப்புவிக்கவே
            மனம், பலம் தாருமே.

5.         என்றென்றைக்கும் உம்மையே
            ஏத்திப் போற்றல் இன்பமே;
            நீர் என் செல்வமானவர்,
            நேசத்துக்குப் பாத்திரர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு