உன்னத மான


Schonster Herr Jesu
Sp S 23

260                             5, 6, 7, 5, 5, 8

1.                 உன்னத மான
                        மா இராஜாவான
            சீர் சிறந்த இயேசுவே;
                        உம்மில் களித்து
                        உம்மைத் துதித்து
            நேசித்துக் கொண்டிருப்பேனே.

2.                     பூ மலர் காடும்
                        பயிர் ஓங்கும் நாடும்
            அந்தமும் சிறப்புமாம்;
                        இயேசுவின் அந்தம்
                        எனக்கானந்தம்
            என் மனதின் குளிர்ச்சியாம்.

3.                     அண்டங்கள் யாவும்
                        சூரியன் நிலாவும்
            அந்தமாய்ப் பிரகாசிக்கும்
                        அவர் முன்பாக
                        மா ஜோதியாக
            மினுங்கும் யாவும் மங்கிப்போம்.

4.                     விண் மண்ணுடைய
                        மகிமை மறைய
            அவர் அந்தமானவர்;
                        வானத்திலேயும்
                        பூமியிலேயும்
            நான் நாடினோர் என் ரட்சகர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு