என் தேவனே என் ஆத்துமா


49. Irish: Arcadia                                                                  C.M.

"What shall I render to my God?"

1.       என் தேவனே, என் ஆத்துமா
                      நீர் தந்த நன்மையை
            சிந்தித்துப் பார்க்கையில், மகா
                        வியப்பாய்த் தோன்றுதே.

2.         உற்பத்திகாலம் முதலாய்
                        என்னை நடத்தினீர்;
            என் ஆவி, தேகம் தயவாய்
                        இம்மட்டும் தாங்கினீர்.

3.         சீர்கேடு நீங்க நெஞ்சத்தை
                        செம்மைப் படுத்தினீர்;
            அநேக ஆறுதல்களை
                        எனக்கருளினீர்.

4.         என் ஜீவகாலம் எல்லாம் நீர்
                        அன்பாய் விசாரித்தீர்;
            இம்மட்டும் என்னைத் தேவரீர்
                        பராமரிக்கிறீர்.

5.         கர்த்தாவே உம்மைப்போற்றுவேன்
                        இடைவிடாமலே;
            எப்போதும் உம்மைப் பற்றுவேன்
                        உற்சாகமாகவே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு