25 September 2018

என் ஆண்டவா என் பாகமே


Spohr

338                                                                                    C.M.

1.         என் ஆண்டவா, என் பாகமே,
                        நீர் நித்த மாட்சிமை;
            விஸ்தார வையகத்திலே
                        நீரே என் வாஞ்சனை.

2.         இவ் வானமும் இப்பூமியும்
                        மிகுந்த அற்பமே;
            இவைகளில் ஏதாகிலும்
                        உமக்கொப்பாகாதே.

3.         பூலோக ஆஸ்திகள் எல்லாம்
                        எனக்கிருந்துமே
            என் நெஞ்சில், கர்த்தரே, நீர்தாம்
                        தங்கா விட்டால் வீணே.

4.         சிநேகம், சுகம், செல்வமும்
                        உம் ஈவாய்ப் பெறுவேன்;
            நன்மைக்கு ஊற்றாம் உம்மையும்
                        நான் நாடித் தேடுவேன்.

5.         நீர் நிறைவான ஆஸ்தியே,
                        நீரே சமஸ்தமும்;
            என் ஏழை நெஞ்சை, கர்த்தரே,
                        உம்மாலே நிரப்பும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...