21 September 2018

இன்று கிறிஸ்து எழுந்தார்


Juesus Christ is risen to-day
Easter Hymn

126                                                  7, 7, 7, 7 with Alleluyas

1.       இன்று கிறிஸ்து எழுந்தார்,
                        அல்லேலூயா!
            இன்று வெற்றி சிறந்தார்!
                        அல்லேலூயா!
            சிலுவை சுமந்தவர்,
                        அல்லேலூயா!
            மோட்சத்தைத் திறந்தவர்
                        அல்லேலூயா!

2.         ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்
                        அல்லேலூயா!
            விண்ணின் வேந்தைப் போற்றுவோம்
                        அல்லேலூயா!
            அவர் தாழ்ந்துயர்ந்தாரே;
                        அல்லேலூயா!
            மாந்தர் மீட்பர் ஆனாரே,
                        அல்லேலூயா!

3.         பாடநுபவித்தவர்,
                        அல்லேலூயா!
            ரட்சிப்புக்குக் காரணர்;
                        அல்லேலூயா!
            வானில் இப்போதாள்கிறார்;
                        அல்லேலூயா!
            தூதர் பாட்டைக் கேட்கிறார்
                        அல்லேலூயா!

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...