திவ்ய மைந்தன் பிறந்தீரே
57. Stuttgart (375) 8s, 7s
"Born
thy people to deliver"
1. திவ்ய மைந்தன்
பிறந்தீரே,
கன்னியாஸ்திரீப்
பாலகா;
நீச கோலம் எடுத்தீரே,
சர்வ ஜன ரக்ஷகா.
2. பாவ மாந்தர் மீட்புக்காக
வான மேன்மை வெறுத்தீர்;
நேச நாதா தாழ்மையாக
மண்ணில்தோன்றி ஜென்மித்தீர்.
3. லோக ராஜா, வாழ்க! வாழ்க!
செங்கோல் தாங்கும் அரசே!
பூமியெங்கும் ஆள்க! ஆள்க!
சாந்த ப்ரபு யேசுவே!
4. தேவரீரின் ராஜ்யபாரம்
நித்ய காலமுள்ளது;
சர்வ லோக அதிகாரம்
என்றும் நீங்கமாட்டாது.
5. வல்ல தேவைப் பணிவோடு
ஏக வாக்காய்ப் போற்றுவோம்,
நித்ய பிதா, பக்தியோடு
நமஸ்காரம் பண்ணுவோம்.
6. ஸ்தோத்திரம், கர்த்தாதி கர்த்தா
ஞானத்துக் கெட்டாதவர்!
ஸ்தோத்திரம் ராஜாதி ராஜா
ஆதியந்த மற்றவர்!
Comments
Post a Comment