ஒன்றே தேவை என்றுரைத்தீர்
Mins is noth sch Herr dies Eixe
Bavarian 43
341 8, 7, 8, 7, 12, 12,
11, 11
1. ஒன்றே தேவை
என்றுரைத்தீர்,
ஸ்வாமி, அதை நாடுவேன்;
என்னை உம்மண்டைக்கழைத்தீர்,
மாங்கையை அரோசிப்பேன்;
நான் உலகை எத்தனை தழுவினாலும்
பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும்
அனைத்தும் அபத்தம், ஒன்றானதை நான்
அடைந்தால், நான் பூரண பாக்கியவான்.
2. இதைச் சிஷ்டிகளிடத்தில்
தேடினால், கிடையாதே;
இயேசு ஸ்வாமியின் வசத்தில்
வாழ்வெல்லாம் இருக்குமே;
என் ஆத்துமமே, உன் இக்கட்டுக்கு சாவும்
இம்மானுவேலே பரிபூரணம் யாவும்,
அகப்படப்பண்ணுவர், அவரை நீ
உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.
3. இந்தப் பங்கையே மரியாள்
தனக்குத் தெரிந்தாளே;
வாஞ்சையாகிய பசியால்
கிறிஸ்தின் பாதத்தண்டையே
இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக
மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
அடைந்ததால், மனத்தில் பூரித்தாளே.
4. நானும் அந்த வாஞ்சையோடே
உம்மையே, என் இயேசுவே,
அண்டிக்கொண்டேன்; நீர் என்னோடே
ஐக்கியமாகும், ஜீவனே,
பெரும் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,
நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
தொடருவேன்; உமக்குள் யாவும் உண்டே.
நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.
5. இப்போ பூரணக் களிப்பு
என் நெஞ்சை நிரப்பிற்று;
நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
என்னைத் திருப்தி யாக்கிற்று.
உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும்
நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும்
சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்,
சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன்.
6. ஆகையாலே நான் தெரிந்து,
பற்றும் பேறெல்லாம் நீரே;
என்னை நீர் ஆராய்ந்தறிந்து
உண்மையாக்கும், இயேசுவே;
நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்,
என் கால்களை மோட்ச வழியிலே காரும்;
நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டே
இருக்குவும்; மற்றது குப்பையாமே.
Comments
Post a Comment