எந்தன் ஜீவன் இயேசுவே


Take my life and let it be
SS 616

302                             7, 7, 7, 7

1.          எந்தன் ஜீவன், இயேசுவே,
            சொந்தமாக ஆளுமே;
            எந்தன் காலம் நேரமும்
            நீர் கையாடியருளும்.

2.         எந்தன் கை பேரன்பினால்
            ஏவப்படும்; எந்தன் கால்
            சேவை செய்ய விரையும்,
            அழகாக விளங்கும்.

3.         எந்தன் நாவு இன்பமாய்
            உம்மைப் பாடவும், என் வாய்
            மீட்பின் செய்தி கூறவும்
            ஏதுவாக்கியருளும்.

4.         எந்தன் ஆஸ்தி, தேவரீர்,
            முற்றும் அங்கீகரிப்பீர்;
            புத்தி கல்வி யாவையும்
            சித்தம் போல் பிரயோகியும்.

5.         எந்தன் சித்தம் இயேசுவே
            ஒப்புவித்து விட்டேனே;
            எந்தன் நெஞ்சில் தங்குவீர்,
            அதை நித்தம் ஆளுவீர்.

6.         திருப் பாதம் பற்றினேன்
            எந்தன் நேசம் ஊற்றினேன்;
            என்னையே சமூலமாய்
            தத்தம் செய்தேன் நித்தமாய்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு