கர்த்தாவே அடியாருக்கு

38. St. Ann: Winchester old.                                     C.M.

"O God, our help in ages past"

1.       கர்த்தாவே, அடியாருக்கு
                        அடைக்கலம் நீரே;
            சகாயம் செய்யும்படிக்கு
                        எழுந்தருள்வீரே.

2.         உமது சந்நிதானத்தில்
                        மகிழ்ச்சி அடைவோம்,
            உமது கையை நீட்டுகில்
                        அஞ்சாமல் நடப்போம்.

3.         மலைகள் தோன்றும் முன்னமே
                        அநாதி காலமாய்
            சுயம்புவாய் இருந்தீரே,
                        இருப்பீர் நித்யமாய்.

4.         ஆயிரம் ஆண்டு உமக்கு
                        ஒர் நாளைப்போல் ஆமே,
            யுகங்கள் தேவரீருக்கு
                        ஓர் இமைக்கொப்பாமே.

5.         சாவுக்குள்ளான மானிடர்
                        நிலைக்கவே மாட்டார்,
            உலர்ந்த பூவைப்போல் அவர்
                        உதிர்ந்து போகிறார்.

6.         கர்த்தாவே, அடியாருக்கு
                        அடைக்கலம் நீரே;
            சகாயம் செய்யும்படிக்கு
                        எழுந்தருள்வீரே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே