எத்தனை நாவால் பாடுவேன்


O for a thousand tongues to sing
Selby

388                                         C.M.

1.        எத்தனை நாவால் பாடுவேன்
                        என் மீட்பர் துதியை!
            என் ஆண்டவர் என் ராஜனின்
                        மேன்மை மகிமையை!

2.         பாவிக்கு உந்தன் நாமமோ
                        ஆரோக்கியம் ஜீவனாம்;
            பயமோ துக்க துன்பமோ
                        ஓட்டும் இன்கீதமாம்.

3.         உமது சத்தம் கேட்குங்கால்
                        மரித்தோர் ஜீவிப்பார்;
            புலம்பல் நீங்கும் பூரிப்பால்,
                        நிர்ப்பாக்கியர் நம்புவார்.

4.         ஊமையோர், செவிடோர்களும்,
                        அந்தகர், ஊனரும்,
            உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!
                        நோக்கும்! குதித்திடும்!

5.         என் ஆண்டவா, என் தெய்வமே,
                        பூலோகம் எங்கணும்
            பிரஸ்தாபிக்க உம் நாமமே
                        பேர் அருள் ஈந்திடும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே