உலகின் வாஞ்சையான
Wie sollh ich pfanen icedmg
Ellacombe, Nyland.
Bavarian 15
47 7, 6, 7, 6 D.
1. உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி இயேசுவே,
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதென்ன?
நான் தேவரீருக்கு
செலுத்த உமக்கென்ன
பிரியமானது?
2. நீர் சேர்கையில் களிக்கும்
சீயோன், கிளைகளை
வழியிலே தெளிக்கும்
நான் உமதுண்மையை
சங்கீதத்தால் துதிப்பேன்
மகிழ்ச்சியுடனே
நான் உம்மைத் தோத்திரிப்பேன்
மா வல்ல கர்த்தரே.
3. நான் நன்மையான ஏதும்
இல்லாத தீயோனாய்
நிர்ப்பந்தம், பயம், நோவும்
நிறைந்தவனுமாய்
இருந்தபோதன்பாக
நீர் என்னை நோக்கினீர்;
உம்மை என் மீட்புக்காக
வெளிப்படுத்தினீர்.
4. கட்டுண்டு நான் கிடந்தேன்
என் கட்டை அவிழ்த்தீர்;
மா சாபத்தைச் சுமந்தேன்,
நீர் அதை நீக்கினீர்;
நீர் என்னை மேன்மையாக்கி
என் ஆத்துமத்திலே
இன்ப நிறைவுண்டாக்கி,
ரட்சிக்க வந்தீரே.
5. வியாகுலம் அடைந்த
நரரின் கூட்டமே,
இக்கட்டினால் நிறைந்த
நிர்ப்பந்த மாந்தரே,
இதோ! சகாயர் வந்தார்;
கர்த்தர் கெட்டோருக்கு
இரட்சகரைத் தந்தார்
அதால், மகிழ்ந்திரு.
6. நெஞ்சே துன்மார்க்கருக்கும்
பகைஞர் உனக்கு
உண்டாக்கும் துன்பத்துக்கும்
பயப்படாதிரு;
உன் மீட்பர் ராஜாவாக
வருகிறாரல்லோ,
அவருக்கு முன்பாக
பேய்க் கூட்டம் நிற்குமோ?
7. பொல்லாதவர்களுக்கு
அநந்த துக்கமும்,
நல்லோரின் கூட்டத்துக்கு
அநந்த பூரிப்பும்
முடிவிலே உண்டாக
அந்நாள் வருவாரே;
ஆம், எங்கள் மீட்புக்காக,
நீர்
வாரும் இயேசுவே.
Comments
Post a Comment