உம்மை ராஜா விசுவாச


Sieh hie bin ich Ehrenkonig
Bavarian 155

337                                                                 8, 7, 8, 7, 8, 7

1.       உம்மை, ராஜா, விசுவாச
                        பக்தியாய்ப் பணிகிறேன்;
            தாழ்மையோடும் கண்ணீரோடும்
                        தேவரீரை அண்டினேன்;
            நீர் மண்ணான பாண்டமான
                        என்னை அன்பாய்ப் பாருமேன்.

2.         என்னைச் சுத்த சீர்ப்படுத்த
                        அருள் செய்யும், கர்த்தரே;
            என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட
                        மேய்ப்பரான உம்மையே
            சேர்வேனாக, நீர் அன்பாக
                        என்னைப் பாரும், இயேசுவே.

3.         தயவோடே நீர் உம்மோடே
                        ஐக்கியமாம் எல்லாருக்கும்
            ஈவதான இன்பமான
                        அருள் என்மேல் வரவும்;
            யாவும் நீரே, தேவரீரே,
                        என்னைப் பார்த்து ரட்சியும்.

4.         ஆ, என் ஞானப் பொழுதான
                        தெய்வ ஆட்டுக்குட்டியே,
            எனதாவி உம்மைத் தாவி
                        தேடும், மணவாளனே;
            பட்சத்தோடும் தயவோடும்
                        என்னைப் பாரும், மீட்பரே.

5.         ஏங்கலோடும் பணிவோடும்
                        என்னுடைய ஆத்துமம்,
            வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும்
                        சத்தம் கேட்டென் சஞ்சலம்
            தீர்ப்பீராக; நீர் அன்பாக
                        என்னைப் பார்த்தால் பாக்கியம்.

6.         உலகத்துப் பொய்ச் சம்பத்து
                        மாயையும் சிங்காரமும்
            ஆன நல்ல செல்வம் அல்ல,
                        நெஞ்சை அவை வாதிக்கும்;
            மெய் வாழ்வான நீர் அன்பான
                        பார்வை தந்து ரட்சியும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு