24 September 2018

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்


55. Yorkshire                                                             10s, 6l.

"Christians, awake, salute the happy morn"

1.       'மெய் பக்தரே', நீர் விழித்தெழும்பும்,
            சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;
            இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
            விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
            தேவாதி தேவன் மானிட னானார்,
            ரட்சண்ய கர்த்தாவகத் தோன்றினார்”.

2.         “இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
            இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
            பூலோக மீட்பராகப் பிறந்தார்,
            எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்”
            என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
            இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3.         அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
            ஆனந்தப் பாட்டைப் பாடி இசைந்து
            “விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
            மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்”
            என்றல்லே லூயாபாடி வாழ்த்தினார்,
            தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4.         இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
            அற்புத காட்சி காண விரைந்து
            யோசேப்புடன் தாய் மரியாளையும்
            முன்னணைமீது தேவ சேயையும்
            கண்டே, தேவன்பை எண்ணிப் போற்றினார்
            ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5.         கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
            உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்
            தம்ஜென்ம முதல்சாவு மட்டுக்கும்
            அப்பாலன் செய்த புண்ய ஜீவ்யமும்
            அன்போடு த்யானம் செய்து வருவோம்
            நம் மீட்பர் பின்னே செல்ல நாடுவோம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...