இயேசு பாவி நேசர்தாம்
Jesus nimmt die Sunder an
Bavarian 100
332 7, 8, 7,
8, 7, 7
1. இயேசு
பாவி நேசர்தாம்,
வழிதப்பிப்போன யாரும்
அவரால் திரும்பலாம்;
அவரால் எக்கேடும் மாறும்,
அவரால் ரட்சிப்புண்டாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
2. நாம் மகா அபாத்திரர்,
அவர் கிருபை புரிந்தோர்;
ரட்சிப்போம் என்றாண்டவர்
சத்தியமிட்டே மொழிந்தார்;
அவர் கிருபாசம்;
இயேசு பாவி நேசர்தாம்.
3. மந்தையில் காணாதது
மேய்ப்பன் கவையால் திரும்பும்;
பாவத்தில் விழுந்தது
அவர் கையினால் எழும்பும்;
கெட்டுப்போக மாட்டோம் நாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
4. அழும் பாவிகளையே
தம்மண்டைக் கழைக்கிறாரே;
வரும் பாவியைத்தாமே
தேவப் பிள்ளையாக்குவாரே;
அதை நம்பி வரலாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
5. துக்கப்பட்டென் பாவத்தை
அறிவிக்க இங்கே வந்தேன்;
மீட்பரே, நீர் கிருபை
செய்யும் அப்போமீட்பைக் கண்டேன்,
போயிற்றென் வியாகுலம்;
இயேசு பாவி நேசர்தாம்,
6. பாவம் சிவப்பாகிலும்,
பஞ்சைப்போலாம்; எக்கறையும்
அவர் ரத்தம் கழுவும்;
நீதியின் வெள்ளங்கியையும்
தாறார், அது நிச்சயம்;
இயேசு பாவி நேசர்தாம்.
7. மனச்சாட்சி குத்தினால்
பருவம் தீர்ந்ததென்று சொல்வார்;
மோசே குற்றஞ் சாட்டினால்
அவர் பிணை நின்றுகொள்வார்;
நீங்கிற்றாக்கினை எல்லாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
8. இயேசு பாவி நேசர்தாம்,
அவர் என்னையும் நேசித்தார்;
நானும் வந்து சேரலாம்,
எனக்கும் மன்னிப்பளித்தார்;
சாவு ஆதாயமுமாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Comments
Post a Comment