குணம் அடை சீர்கெட்ட


59. Pearsall; Aurelia                                                 7s, 6s, 8l.

"Mit Ernst o Menschenkinder"

1.       குணம் அடை, சீர்கெட்ட
                        ஆதாமின் ஜாதியே;
            தெளிவடை நீ, மெத்த
                        இருண்ட லோகமே;
            உனக்கு ரட்சிப்பாக
                        மகா தயாபரர்
            மானிட ரூபமாக
                        இப்பாரில் தோன்றினர்.

2.         கறைகள் நீங்க நெஞ்சை
                        சுத்திகரியுங்கள்;
            கர்த்தாவுக்கு வழியை
                        செவ்வைப்படுத்துங்கள்,
            நொறுக்கப்பட்ட ஆவி
                        அவருக்கேற்றது;
            குணப்படாத பாவி,
                        கெடுநாள் கிட்டுது.

3.         கர்த்தாவே, என் உள்ளத்தை
                        நீர் சுத்தஞ் செய்திடும்;
            சிறந்த உம்தன் மீட்பை
                        என் கண்கள் காணட்டும்;
            நான் நித்தம் உம்மைப் போற்றும்
                        களிப்புண்டாகவே
            என் நெஞ்சில் நீரே வாரும்
                        கடாட்சமாகவே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு