இறங்கும் தெய்வ ஆவியே


Komm heiliger Christ Herre Gott
Warrington

273                                                                               L.M.

1.       இறங்கும், தெய்வ ஆவியே,
            அடியார் ஆத்துமத்திலே;
            பரத்தின் வரம் ஈந்திடும்,
            மிகுந்த அன்பை ஊற்றிடும்.

2.         உம்மாலே தோன்றும் ஜோதியால்,
            எத்தேசத்தாரையும் அன்பால்
            சம்பந்தமாக்கி, யாவர்க்கும்
            மெய் நம்பிக்கையை ஈந்திடும்.

3.         பரத்தின் தூய தீபமே,
            பரத்துக்கேறிப் போகவே
            வானாட்டு வழி காண்பியும்,
            விழாதவாறு தாங்கிடும்.

4.         களிப்பிலும் தவிப்பிலும்,
            பிழைப்பிலும் இறப்பிலும்,
            எப்போதும் ஊக்கமாகவே
            இருக்கும்படி செய்யுமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே