உம் அருள் பெற இயேசுவே
I am not worthy holy Lord
Beatitudo
187 C.M.
1. உம் அருள்
பெற, இயேசுவே,
நான்
பாத்திரன் அல்லேன்;
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம்
வையுமேன்.
2. நீர் எனக்குள் பிரவேசிக்க,
நான்
தக்கோன் அல்லவே;
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம்
இல்லையே.
3. ஆனாலும் வாரும் தயவாய்
மா
நேச ரக்ஷகா;
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா.
4. நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன்
ஆயினேன்;
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப்
பாருமேன்.
5. தெய்வீக பான போஜனம்
அன்பாக
ஈகிறீர்;
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச்
செய்கிறீர்.
6. என் பக்தி, ஜீவன் இதினால்
நீர்
விர்த்தியாக்குமேன்;
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம்
பண்ணுமேன்.
7. என் ஆவி, தேகம், செல்வமும்
நான்
தத்தம் செய்கிறேன்;
ஆ! இயேசுவே சமஸ்தமும்
பிரதிஷ்டை
செய்கிறேன்.
Comments
Post a Comment