20 September 2018

கர்த்தாவே அடியேனை நீர்


39. Hesperus (Elim)                                                              L.M.

"Lord, Thou hast searched and..."

1.       கர்த்தாவே, அடியேனை நீர்
            ஆராய்ந் தறிந்திருக்கிறீர்;
            என் தேகம் ஆவி சிந்தையும்
            உமக்கு நன்றாய்த் தெரியும்.

2.         நினைக்கு முன் என் எண்ணமும்
            நடக்குமுன் என் வழியும்
            நான் பேசுமுன் என் வார்த்தையும்
            உமக்கே எல்லாம் தெரியும்.

3.         என் முன்னும் பின்னும் நிற்கிறீர்
            நீர் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
            உமக்குத் தப்பி நான் எங்கே
            பறந்துபோவேன் கர்த்தரே?

4.         உமக்கு மறைந்தோடவே
            ஒளிப்பிடம் வேறில்லையே,
            என்றெண்ணும் ஞானம் தாருமேன்
            எக்காலும் என்னைக் காமுமேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...