என் ஆவி ஆன்மா தேகமும்


My spirit soul and body
Wigtowe

300                                         C.M.

1.         என் ஆவி ஆன்மா தேகமும்
                        இதோ படைக்கிறேன்;
            என்றும் உம் சொந்தமாகவும்
                        பிரதிஷ்டை செய்கிறேன்.

2.         ஆ இயேசு வல்ல இரட்சகா,
                        உம் நாமம் நம்புவேன்;
            ரட்சிப்பீர், மா தயாபரா,
                        உம் வாக்கை வேண்டுவேன்.

3.         எப்பாவம் நீங்க, உறுப்பு
                        தந்தேன் சமூலமாய்;
            போராட்டம் வெற்றி சிறப்பு
                        படைக்கலங்களாய்.

4.         நான் உம்மில் ஜீவித்தல் மகா
                        மேலான பாக்கியம்;
            தெய்வ சுதா, என் இரட்சகா,
                        என் ஜீவனாயிரும்.

5.         என் நாதா, திரு இரத்தத்தால்
                        சுத்தாங்கம் சொந்தமே;
            ஆனேன்! உம் தூய ஆவியால்
                        பலி நான் உமக்கே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு